ரஷ்யாவிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அழைப்பு.!!
Zelenskyy call to world protest
உக்ரைன் மீது படையெடுத்து உள்ள ரஷ்ய 28வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடங்கு பதிலடி கொடுத்து வருகிறது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிகளவில் உள்ளது. இந்தப் போரால் ரஷ்ய ராணுவம் தரப்பில் இதுவரை 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ அதிகாரிகளுடன் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தகவலை நேட்டோ ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான உலக அளவில் போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இக்கட்டான சூழ்நிலை அணியை ஆதரிக்க செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Zelenskyy call to world protest