உக்ரைன் - ரஷ்யா போர்.. நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம்.. அதிபர் ஜெலன்ஸ்கி.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பல்வேறு உக்ரைன் நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையிலும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கைப்பற்றப்பட்ட நகரங்களை மீட்க உக்ரைன் ராணுவம், ரஷ்ய ராணுவத்திடம் கடுமையாக போராடி வருகிறது. 

இந்த பதற்றத்திற்கு இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தையில் உக்ரைனின் முன்னுரிமைகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி கூற உள்ளோம். 

உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம். துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பு தேவையாக உள்ளது. ஒரு இது மோசமானது அல்ல. முடிவை பார்ப்போம். ரஷ்யா முற்றுகையிட்ட மரியுபோல் நகரில் மோசமான நிலைமையில் நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றத்தில் நான் தொடர்ந்து முறையிட்டு வருகிறேன். 

உக்ரைனின் ஆயுதப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் ஒரு சில பகுதிகளில் முன்னேறி வருகின்றனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zelenskyy says about stop the war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->