உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையே போர் வெடிக்க என்ன காரணம்.?
Ukraine and Russia war reason reason
இன்று காலை முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இன்று காலை ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா இராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலகளவில் போர் பதற்றம் நிலவுகிறது.
உக்ரைன் - ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சுதந்திர நாடான உக்ரைன். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு நேர் எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததே ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையின் தொடக்க புள்ளி. இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறி, உடனே எதிர்ப்பைப் பதிவுசெய்தது ரஷ்யா.
2010ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யானுகோவிச், ரஷ்யாவுடன் இணக்கமான உறவை முன்னெடுத்தார். ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எரிவாயு இவ்வாறு உடன்பாடு கண்டு அவர், கைமாறாக கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்திற்கான ஒப்பந்த காலத்தை நீட்டித்தார்.
2013ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை அதிபர் விக்டர் யானுகோவிச் நிறுத்தி வைத்ததும், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தனர். 2014ஆம் ஆண்டு போராட்டம் வன்முறையாக உருவெடுக்க, அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து துரத்தப்பட்டார். இந்த போராட்டங்களின் பின்னணியில் மேற்குலகம் இருப்பதாக சந்தேகப்பட்ட ரஷ்யா, பதிலடியாக கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. கீவில் நடந்தேறிய ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்புரட்சி ஆக, கிழக்கு உக்ரைனில் டோனட்ஸ்க் , லுகான்ஸ்க் தன்னாட்சி பிரதேசங்களாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துக் கொண்டனர்.
2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வணிக ஒப்பந்தம் ஒப்பந்தத்தை ஸ்க்செய்துகொண்டது. அத்துடன் நேட்டோவில் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உக்ரைன். தீர்மானித்தது 2018ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவுடன் சாலை மற்றும் ரயில் வழியாக இணைக்கும் கேர்ச் நீர் இணைகள் 19 கிலோமீட்டர் நீளம் உள்ள பாலத்தை ரஷ்ய கட்டி முடித்தது. கிரிமியா ஒருபோதும் திரும்ப கிடைக்காது என்று உக்ரைனுக்கு உணர்த்தும் ரஷ்யாவின் பதில் நடவடிக்கை இதை என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் வகித்தனர்.
2020 ஆம் ஆண்டு கொரோனாவின் தொற்றுக்கு நடுவே உக்ரைன் புதிய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உடன் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தார். 2021 ஆம் ஆண்டு ஜூலையில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத வரலாற்று ரீதியான உறவு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எழுதிய விரிவான கட்டுரை அவரது ஆழ்மனம் விருப்பங்களை எதிரொலித்தது.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் உக்ரைன் எல்லையை ஒட்டியே சுமார் ஒரு லட்சம் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டு ஜனவரியில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவும் படைகளைத் தயார் செய்ய, பணி போருக்கு பிந்தைய ஐரோப்பிய கண்டத்தில் முதன் முறையாக மிகப்பெரிய போருக்கான உச்சகட்ட பதற்றம் நிலவியது. பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்ட போதும், ரஷ்யா மற்றும் உக்ரைன் நிலைப்பாட்டில் காட்டிய உறுதியை இரு நாடுகளிடையே போராக வெடித்து உள்ளது.
English Summary
Ukraine and Russia war reason reason