பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.. நிம்மதியில் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 

தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். 

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, சிறிதளவில் இறக்கம், ஏற்றம் கண்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  அதன்படி, பெட்ரோல் விலை ரூ.102.91-க்கும், டீசல் விலை ரூ. 92.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 mar petrol price in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->