டெஸ்லாவுக்கு எதிராக தடம் பதிக்கும் டாடா - சலுகைகளை வாரி வழங்கும் புதிய முயற்சி.! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் பிரபல நிறுவனமான டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பல சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 2 லட்சம் மின்சார வாகன விற்பனையை தாண்டியுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக 45 நாட்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது. 

அதாவது ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ், ஜீரோ டௌன் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி முழு தொகையையும் கடனாக பெற்று டாடா மின்சார கார் வாங்குதல் உள்ளிட்டவைகள் இந்த சலுகைகளில் அடங்கும்.

அத்துடன் Tata Nexon EV, Tata Curvv EV வாங்குபவர்கள் டாடா பவரின் சார்ஜிங் நெட்வொர்க்கிற்கான 6 மாத இலவச காம்ப்ளிமென்ட்ரி ஆக்சிஸை பெற முடியும். அதேபோல, 7.2 கிலோ வாட் ஏசி கொண்ட வீட்டில் சார்ஜர் செய்யும் கருவிகள் இலவசமாக பொருத்தித் தரப்படும். மின்சார வாகனத்திற்கு மாற நினைக்கும் டாடா வாகன உரிமையாளர்களுக்கு ரூ.20,000 வரை போனஸ் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tata 50000 discount for electric cars


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->