சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை விற்பனைக்கு அனுமதிக்க முடியாது - நிதின் கட்கரி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் சீனாவில் கார்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய விரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் மோட்டார் வாகன துறை மிகப்பெரியது என்றும், இதில் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டு வர்த்தகம் நடைபெறுவதாகவும், தெரிவித்தார்.

மேலும், ஹுண்டாய், டொயோட்டா, ஹோண்டா மெர்ஸிடஸ், வோல்வோ, பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் இங்கு கார்களை உற்பத்தி செய்கின்றன என்றும், அதை போலவே டெஸ்லா நிறுவனத்தையும் வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால்  டெஸ்லா நிறுவனம் அதனுடைய பேட்டரி கார்களை சீனாவில் தயாரித்து அதை இந்தியாவில் சந்தைப் படுத்த நினைப்பதை எந்ற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்ற நிறுவனங்களைப் போல டெஸ்லா நிறுவனமும் இந்தியாவிலேயே தொழிற்சாலையை நிறுவி கார்களை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இங்கு இருப்பதால் அவைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவை போலவே டெஸ்லா நிறுவனத்திற்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்காவின் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் கார்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு மந்நில அரசுகள் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது பேசு பொருளாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tesla China Cars Nitin Gadkari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->