அயன் பட நடிக்கருக்கா இந்த நிலை.! கண்ணீர் மல்கி கோரிக்கை.!
actor nandu jegan posts a heart melting insta post for her ill mother
அயன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நண்டு ஜெகன். அந்தத் திரைப்படத்தில் சூர்யாவின் நண்பனாக சிட்டிபாபு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நண்டு சிண்டு எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் புகழ்பெற்றதால் இவர் நண்டு ஜெகன் என சினிமா வட்டாரங்களில் அறியப்பட்டவர். அயன் திரைப்படம் தவிர கோ, மரியான், பையா உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் உருக்கமான செய்தி ஒன்றினை கண்ணீர் மல்க வெளியிட்டு இருக்கிறார். ஜெகனின் தாயார் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கவலையில் இருக்கும் ஜெகன் தனது தாயாரை நினைத்து உருகி பதிவு செய்து இருக்கிறார்.
அந்தப் பதிவில் எங்களை ஈன்ற போது எத்தனை இரவுகள் இப்படித்தானே கவலை தோய்ந்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய் உன் நலம் வேண்டி சிவனை பிரார்த்திக்கிறேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்தப் பதிவு ரசிகர்கள் மனதை உருக வைத்துள்ளது. அவர்களும் ஜெகனின் தாயாருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
English Summary
actor nandu jegan posts a heart melting insta post for her ill mother