ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை அடுத்து, கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்..

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் இயக்குனர் பாலாவின் ''வணங்கான்'', இயக்குனர் வெற்றிமாறனுடன் ''வாடிவாசல்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர்- ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள ஆர்சி-15 படத்தின் ஒரு கெஸ்ட் ரோலில்  சூர்யா நடிக்கவுள்ளார். இதில், நடிகர் சூர்யா 10 நிமிடம் காட்சியில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Surya guest role in Shankar movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->