நடிகர் சிங்க முத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகர் வடிவேலு.....உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?
Actor Vadivelu asked actor Singha Muthu for compensation of Rs 5 crore what did the high court order
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 1991-ம் ஆண்டு சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, என் கடும் உழைப்பால் முன்னேறி, 300 படங்களுக்கு மேல் நடித்து நகைச்சுவை நடிகரானேன். மேலும் நடிகர் சிங்கமுத்துவும், நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒன்றாக பல படங்களில் நடித்தோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், புகழையும் தந்தது.
தொடர்ந்து எனக்கு கிடைத்த வரவேற்பு சிங்கமுத்துவுக்கு கிடைக்காததால், அவருக்கு பொறாமை உண்டானது. அதனால், என் மீது பகை கொண்டு, 2015-ம் ஆண்டுக்கு பிறகு என்னைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினார். அதனால், அவர் இல்லாமல் நடிக்கத் தொடங்கினேன். இதற்கிடையில் தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய ஒரு நிலத்தை வேண்டுமென்றே சிங்கமுத்து தனக்கு வாங்கிக் கொடுத்தார்.
இதுகுறித்து சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னை மிகவும் தரக்குறைவாக பேசி, ஒரு துளி உண்மைக்கூட இல்லாத பல பொய்களையும் கூறியுள்ளார்.
இது எனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு, பொதுமக்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை சிங்கமுத்து ஏற்படுத்தியுள்ளார். இதனால், 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், என்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிங்கமுத்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Actor Vadivelu asked actor Singha Muthu for compensation of Rs 5 crore what did the high court order