'லியோ' படத்துக்கு எதிரான வழக்கு: லோகேஷ் கனகராஜிடம் நீதிபதிகள் 'சரமாரி கேள்வி'! - Seithipunal
Seithipunal


வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பில், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் மனுதாரர் தரப்பில் லியோ திரைப்படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இருக்கிறது. இந்த வன்முறை காட்சிகள் எந்தெந்த இடத்தில் வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி அந்த காட்சிகள் குறித்து விவரங்களையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். 

மதுரையைச் சார்ந்த ராஜமுருகன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. 

மேலும் துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகள், வீட்டில் துப்பாக்கி தயாரிப்பது, வெடி பொருட்கள் தயாரிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட வன்முறை காட்சிகள் உள்ளது. 

இந்த காட்சிகள் சிற்றார்களையும் இளம் தலைமுறையையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இவற்றை தணிக்கை குழுவினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் லோகேஷ் கணகராஜிக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 

இது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் திரைப்படம் இது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு. இது எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார். 

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள், லியோ திரைப்படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது, எந்த இடத்தில் அந்த காட்சிகள் வருகிறது என கேள்வி எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தொடர்ந்த வழக்கு குறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case against Leo film issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->