குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் போட்டியிட போவது இவர்கள் தானா? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!
cook with komali season five contestants list
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. பொதுவாக, பிக் பாஸ் முடிந்ததும் ஒரு சில மாதங்களில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி விடும்.
அந்த வகையில், குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், யார் யார் பங்குபெறப் போகிறார்கள் என்ற விவரமும் கசிந்துள்ளது.
வழக்கமாக, ‘பிக் பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விஜய் டிவியில் உள்ள பிரபலங்களையே பெரும்பாலும் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுப்பார்கள். அதன் படி, இந்த சீசனில் நடிகை வடிவுக்கரசி, டப்பிங் கலைஞரும், நடிகையுமான தீபா வெங்கட், நடிகர் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக் பாஸ் புகழ் விஷ்ணு விஜய், ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஹேமா, நடன இயக்குநர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா ஆகியோர்தான் இதுவரை இறுதிப்பட்டியலில் உள்ளார்கள்" எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
cook with komali season five contestants list