குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள செம்பி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்.!
CWC Ashwin in sembi movie 2nd trailer released
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ள செம்பி திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினை வைத்து செம்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான காடன் மற்றும் தொடரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் மீண்டும் தனது வெற்றி பார்முலாவான காடு, இயற்கை, காதல் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.
குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், ‘செம்பி’ திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் "செம்பி" திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் டிசம்பர் இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.
English Summary
CWC Ashwin in sembi movie 2nd trailer released