பயந்து நடுங்கும் தில்ராஜு.. மிரண்டு போய் கூறிய வார்த்தைகள்.!
Dilraju fear about medias
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி படிப்பள்ளி இயக்குகின்ற திரைப்படம் தான் வாரிசு. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும், இதில் பிரபு, சம்யுக்தா, சரத்குமார், யோகி பாபு, ஷியாம் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கும் நிலையில் தில் ராஜு படத்தை தயாரிக்கின்றார். வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.
அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய போது தில் ராஜு, "விஜய் மற்றும் அஜித்துக்கு சம அளவில் திரையரங்குகளை ஒதுக்காமல் விஜய்க்கு அதிகமாக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ." என்று தெரிவித்து இருந்தார்.
இது பெரும் சர்ச்சையாகிய நிலையில் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. இத்தகைய நிலையில், இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தில் ராஜு, "மீடியாக்கள் முன்பாக பேசவே பயமாக இருக்கிறது. 45 நிமிட பேட்டி 20 நொடி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. நான் யாரையும் தரம் தாழ்த்தி அல்லது பாராட்டி பேசவில்லை. அனைத்து படங்களையும் தான் ஆதரிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dilraju fear about medias