8-வது படிக்கும் சிறுமியை கர்பமாக்குவோம் என பாடிய சரவெடி சரண்.! இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு ட்வீட்.!
director mohan g tweet for kana saravedi saran song issue
சரவெடி சரண் என்ற 26 வயது கானாபாடகர் ஒருவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர், " பால்வாடி படிக்கும் போதே குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து.. எட்டாவது படிக்கும்போதே சிறுமியை கர்ப்பமாக்கி வாந்தி எடுக்க வைத்து விடுவேன். அப்போது தான் என்ன விட்டு போகாது." என்று பெண்கள் குறித்து இழிவாக பாடி இருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகவும் பார்க்கப்படுகிறது. மிகவும் வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்தப்பாடல் தற்போதைய நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், கானா பாடகர் சரவெடி சரண் பாடும் பாடலை ரீட்வீட் செய்து, இது போன்றவர்கள் மீது போக்சோ சட்டம் பாய வேண்டும் என தெரிவித்துள்ளார். இவரைப் போன்று பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கானா பாடகர் சரவெடி சரணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
director mohan g tweet for kana saravedi saran song issue