''எலக்சன்'' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்.! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''எலக்சன்''. இந்த திரைப்படத்தில் புகழ் ப்ரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியம், நாச்சியார் சுகந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மையமாகக் கொண்டு ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகின்ற மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியாகியது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election movie trailer released update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->