அயோத்தி ராமருக்கு 'கோடியில் நன்கொடை': ஹனு-மான் படக்குழு அதிரடி அறிவிப்பு!
Hanuman movie crew donate ramar temple
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹனுமான்'. மேலும் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினைய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சௌரப் ஆகியோர் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பான் இந்தியா படமாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. ஹனுமான் திரைப்படத்தின் வசூலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்குவதாக படக்குழுவினர் முன்னதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ. 5 நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரிமியர் ஷோகளில் மட்டும் ரூ. 14,88,810 அளித்தனர். தற்போது 53 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில் மேலும் ரூ. 2.66 கோடி நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Hanuman movie crew donate ramar temple