2 ஆம் கட்ட கல்வி விருது...  ''ஆளப்போறான் தமிழன்'' பாடலுடன் மேடையேறிய தவெக தலைவர் விஜய்!  - Seithipunal
Seithipunal



தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜயின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட கல்வி விருது நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும்பொழுது மெர்சல் திரைப்படத்தின் ''ஆளப்போறான் தமிழன்'' என்ற பாடல் பின்னணியில் ஒழிக்க கையசைத்தபடி நடிகர் விஜய் மேடையில் ஏறினார். 

முதற்கட்டமாக ஜூலை 22 ஆம் தேதி கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். 

அப்போது நடிகர் விஜய், தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை எனவும் நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது .


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Education Award 2 nd Phase Vijay entry


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->