நான் இயக்குனர் ஷங்கர் மகளை காதலிக்கிறேன் - பிரபல நகைசுவை நடிகர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


யூடியூப் திரை விமர்சனங்களில் பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் சமீப காலமாக வெளியாகும் அனைத்துப் படத்திற்கும் நகைச்சுவையாக விமர்சனம் செய்வது டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் இன்று வெளியானது.

இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடத்துள்ளார். இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளதால் பல்வேறு இடங்களிலும் அதிகாலைக் காட்சியில் ரசிகர்கள் படம் பார்த்து வந்தனர். 

சென்னையில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் படம் முடிந்த வெளியே வந்த நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ், "பிரமாண்ட இயக்குநரின் மகளைப் பார்க்கத் தான் வந்தேன். மாமனார் ஷங்கர் சார்... நான் அதிதியைக் காதலிக்கிறேன். நீங்க பெரிய இடம். நான் ஏழை. திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்". என்று நகைச்சுவையாக கையில் போதையுடன் பேட்டி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love with director Shankars daughter statement made comedian


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->