3 அமைச்சர்களின் பதவி பறிப்பு! 4 பேர் அமைச்சர்களாக நாளை பதவியேற்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவை மாற்றம் அதிரகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதலமைச்சராகிறார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. மேலும், நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும், தற்போது அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலாகா மாற்றம்:

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம்

காதி மற்றும் பால்வளத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

புதிய அமைச்சர்கள்:

மீண்டும் அமைச்சராக எஸ்.எம்.நாசர், செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு கொறடாவாக உள்ள கோ.வி. செழியன் மற்றும் ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin cabinet change 2024


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->