திடீர் மூச்சுத்திணறல்.. நடிகர் மோகன் லாலுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் தரப்பில் வெளியான செய்தி! - Seithipunal
Seithipunal


நடிகர் மோகன் லால் உடல்நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன்லால், தமிழ் திரைப் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது பிரித்விராஜ் இயக்கும் எம்புரான், பாரோஸ் மற்றும் எல்360 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் மோகன் லால் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் காரணமாக கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, நடிகர் மோகன்லாலுக்கு வைரஸ் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அடுத்த 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு அவர் செல்ல வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், நடிகர் மோகன்லால் இன்னும் சில வாரங்கள் நன்றாக ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மோகன்லால் விரைவில் குணமாக ரசிகர்கள் அவருக்காக பிராத்தனை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohanlal in hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->