தளபதி 66 தயாரிப்பாளருடன் கைகோர்த்த மிஷ்கின்.! ரசிகர்களுக்கு உற்சாக தகவல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கடந்த 2016ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம்தான் பிசாசு. அதில் பேய் கதாபாத்திரத்தை ஒரு தேவதையைப் போல மிஷ்கின் காட்டி இருப்பார். 

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் எடுத்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். 

இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட படம் அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. 

இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை தில் ராஜு கைப்பற்றியிருக்கிறார். தளபதி 66 திரைப்படம் தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysskin is with dil raju


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->