கற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு... கடும் எதிர்ப்பிற்கு ஆளாகிய ரன்பீர் கபூர், சாய்பல்லவி.!
Ranbir Kapoor opposes Sai Pallavi play Ram Sita
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக உள்ள சாய் பல்லவி ஹிந்தியில் உருவாகும் ''ராமாயணம்'' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க உள்ளார்.
ராமாயணம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படபிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலானது. சீதை கதாபாத்திரத்திற்கு சாய்பல்லவி பொருத்தமானவர் இல்லை என ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் லக்ஷ்மணன் ஆக நடித்த பிரபல இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி தெரிவித்திருப்பதாவது,
அனிமல் திரைப்படம் பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்ய மிகவும் கஷ்டமாக உள்ளது. சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். ஆனால் அவரது முகத்தில் சீதை சாயல் இல்லை.
இதனால் சீதையாக அவர் எப்படி நடிக்க போகிறார் என எனக்கு புரியவில்லை. சாய்பல்லவி நடித்த திரைப்படங்களை நான் பார்த்ததில்லை.
அவரது முகத்தில் தேவதைக்குரிய லக்ஷணங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார். சுனில் லாஹ்ரியின் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ranbir Kapoor opposes Sai Pallavi play Ram Sita