நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இன்று நேற்று நாளை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ளனர். அயலான் படத்தில் 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் கடந்த 2017ல் தொடங்கப்பட்டபோது இருந்த பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்ட அயலான் படம் 24AM நிறுவன பேனரில் இருந்து KJR ஸ்டூடியோஸ் பேனருக்கு மாறியது. அதன் பிறகு மீண்டும் அயலான் படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 6 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான் படத்தின் பணிகள் தற்போது நிறைவு பெற்ற நிலையில் அதன் ரிலீஸ் தேதியானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான், விஜய்யின் லியோ போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதால் அயலன் படம் 6 வருடங்களுக்கு பிறகு வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan ayalon movie release date announced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->