சூர்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! வரவேற்பை பெற்ற அப்டேட்.!
surya 40 first look poster viral
நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது.
சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் 'சூரரைப்போற்று'. இந்த திரைப்படத்திற்கு பின், சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகின்றார்.

இதனை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும், இதில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
surya 40 first look poster viral