சாதனை படைத்த அரபிக்குத்து பாடல்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சாதனை படைத்த அரபிக்குத்து பாடல்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். அவரது இசையில், 'அரபிக் குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன. 

அதிலும், குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் படம் வௌியாவதற்கு முன்பாகவே, யூடியூபில் மாபெரும் ஹிட் அடித்ததுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில், அரபிக்குத்து பாடல் யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உலகளவில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

world record breaking Arabic kuththu song


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->