பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.!
date extened of apply tenth practical exam
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் செயல் திட்ட தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஏப்ரல் 2024, நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் பதிவு செய்ய விடுபட்டுள்ள மாணவர்களுக்கு தற்போது மேலும் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. தற்சமயம் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 06.11.2023 முதல் 10.11.2023 வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆகவே, தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.11.2023 முதல் 10.11.2023 வரை பதிவிறக்கம் செய்து, தங்களது விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து 10.11.2023 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இதற்கு பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது பயிற்சி வகுப்புக்கான பதிவு மட்டுமே. ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள இத்தேர்வர்கள் (முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள அல்லது ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகைப்புரியாத தேர்வர்கள்) இத்துறையால் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு சமர்ப்பித்து பொதுத்தேர்விற்கு பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.
பிறகு வழங்கப்படும் ஏப்ரல் 2024- ஆண்டிற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டே தேர்வர்கள் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
date extened of apply tenth practical exam