இன்று வெளியாகிறது NEET MDS நுழைவுச் சீட்டு.!!
neet mds exam hall ticket released today
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் NEET MDS நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச் சீட்டுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். தங்கள் நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான natboard.edu.in இல் அணுகலாம்.

NEET MDS தேர்வு ஏப்ரல் 19 ஆம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வு வடிவத்தில் நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் NEET MDS நுழைவுச் சீட்டு 2025 ஐப் பதிவிறக்கம் செய்யலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
neet mds exam hall ticket released today