பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, 77 விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும், பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும். 

பள்ளியில் மாணவர்களின் சண்டை, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். 

மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த 'வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கக் கூடாது. 

ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுதை தவிர்க்க வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் தலைமை ஆசிரியரே வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும். 

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், பாட தேர்ச்சி சதவீதம் என தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

10, 12-ம் வகுப்பு பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் சரியான பாடத்திட்டத்தின் படி பாடம் நடத்துகிறார்களா என்பதை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும். 

தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை பகுதியில் வசிக்கும் தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பள்ளிக்கு வேண்டி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை அனுப்பி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Education Department new Order


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->