தமிழக அரசின் 92 பணிகளுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்.! - Seithipunal
Seithipunal


குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. 

இதன்படி 18 துணை மாவட்ட ஆட்சியர், 26 காவல் துணை சூப்பிரண்டு, 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், 3 மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த 92 காலிப் பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனை தொடர்ந்து, இதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகின்ற 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதனையடுத்து, இந்த தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்தகட்டமாக நடைபெற இருக்கும் முதன்மைத்தேர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc group 1 application aug


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->