ஆயிரம் விளக்கில் குஷ்பூ ஒரு சிவப்பு விளக்கு.! திமுகவின் பெண்ணிய முகத்திரை அம்பலம்.?! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க தமிழகத்தில் பலமுனைப்போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

ஒவ்வொரு கட்சிகளும், கூட்டணி தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என்று தீவிரமாக பணியாற்றி வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 

காங்கிரசிற்கு அடிமையாக இருந்த திமுக.. ஸ்டாலினை விளாசி தள்ளிய முதலமைச்சர்.!!  - Seithipunal

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

சமீபத்தில், காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு வந்து சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு இதில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில், திமுகவின் ஐடி விங் குஷ்புவை படுமோசமாக ஒரு மீம் தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. 

பெண்ணுரிமை, பெண்ணியம் என்று பேசுகின்ற திமுக சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு வெறும் 12 தொகுதிகளை ஒதுக்கி வஞ்சனை செய்துள்ளது. மேலும், தற்போது குஷ்புவை இழிவுபடுத்தும் வகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரு சிவப்பு விளக்கு என்று மிகவும் கீழ்தரமாக அவரை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். 

இந்த மீம் சமூகவலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. திமுகவில் குஷ்பூ இருந்த போது இப்படி எல்லாம் விமர்சிக்காத திமுகவினர், தற்போது குஷ்புவை இப்படி கேவல படுத்துகின்றனர் என்றும், பெண்களுக்கான கட்சியாக காட்டிக்கொள்ளும் திமுகவின் நிலை இவ்வளவுதான் என்றும், சமூக வலைதளங்களில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk it wing insults Kushboo


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->