கொத்தமல்லியை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
benefits of koththamalli
சமையலறையில் இடம்பெறும் முக்கிய பொருள்களில் ஒன்று கொத்தமல்லி. இந்த மல்லியை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* வரமல்லி தைராய்டு பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. ஓரிரவு ஊறிய வரமல்லி தண்ணீரை முதலில் வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பருகிவிடவேண்டும். ஹார்மோன் பிரச்னைகளால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. வாதம் மற்றும் கபம் சமமின்மையால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதை இந்த வரமல்லி சரிசெய்கிறது.
* இரும்பு, பொட்டாசியம் மற்றும் சில முக்கிய மினரல்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது வரமல்லி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வரமல்லியின் சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டுமெனில் அதை ஊறவைத்த தண்ணீரை பருகும்போதுதான் கிடைக்கும்.
* வரமல்லி செரிமானம், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் குறையும். சில ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, வரமல்லி விதைகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ஹைப்போகிளைசெமிக் உட்பொருட்கள் உள்ளது. இது நீரிழிவு நோய்யை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இதை ஊறவைத்து அதன் தண்ணீரை பருகுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும்.
* வரமல்லியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான வேதிப்பொருட்கள் உள்ளது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்டது வரமல்லி விதைகள். வீக்க கோளாறுகள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்.
* இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கும். வரமல்லியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் ஃப்ரீ ராடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து உடலை காக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமான வயோதிகத்தை எட்டுகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
* வரமல்லியில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இந்த தண்ணீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. இதனால் தேவையற்ற பொருட்களை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வரமல்லி தண்ணீருடன் சேர்த்து சரிவிகித அளவிலான உணவு எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை குறைக்க உதவுகிறது.
* மாதவிடாய் பிரச்னைகளுடன் தொடர்புடைய கோளாறுகளையும், அசவுகர்யங்களையும் சரிசெய்ய வரமல்லி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில், வரமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது உங்கள் வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வயிற்று வலியையும் போக்குகிறது.