பயத்தை போக்கும் புடலங்காய் - வேறென்ன நோய்களைத் தீர்க்கும்?. - Seithipunal
Seithipunal


காய்கறி வகைகளில் ஒன்று புடலங்காய். இந்தப் புடலங்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதுக்கு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* புடலங்காயில், கலோரிகள் குறைவாகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள் தினமும் புடலங்காயை எடுத்துக் கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தினமும் சாப்பிட்டாக கூடிய ஒரு பொருளாக இது உள்ளது. 

* புடலங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், வயிற்றில் எளிதாக செரிமானமாகிவிடும். உடலில் உள்ள கொழுப்பை விரைவாகக் குறைக்கவும் உதவுகிறது.

 

* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய தசைகள் சரியாக இயங்குவதை உறுதிசெய்கிறது.

* உடலில் உள்ள கழிவுகள் மற்றும் சிறுநீரகக் கற்களை இயற்கை முறையில் வெளியேற்றுகிறது. சிறுநீரகத்திற்குள் தண்ணீர் சுரப்பதை மேம்படுத்துகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது. புடலங்காயின் சாறு சிறுநீரகம் மற்றும் வயிற்றின் அன்றாட பிரச்னைகளை தீர்க்கிறது.

* புடலங்காயில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலியைப் போக்குகிறது. இதன் மலமிளக்கும் தன்மை, இயற்கை முறையில் குடல் இயக்கத்தை தூண்டுகிறது. இதனால் குடலில் எந்தவித பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

* புடலங்காய்க்கு உடலின் உள்ளார்ந்த சளியை நீக்கும் தன்மை உள்ளது. சளி உருவாகும்போது, அதை சுவாசப்பாதைகளில் இருந்து நீக்குகிறது. நுரையீரல் இயக்கத்துக்கு நல்லது. தொழில் அலர்ஜியைத் தடுக்கிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

* புடலங்காயில் இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் குறைவு. புடலங்காயை வெட்டி, வேகவைத்து உப்பு, மிளகுத்தூள் தூவி தினமும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள் டயட்டுக்கு பெரிதும் உதவுகிறது.

* இயற்கை அமைன்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நரம்பியல் இயக்கங்களைக் தூண்டுகிறது. மூளை மற்றும் நரம்பு செல்களின் ஆக்ஸிடேசனைத் தடுக்கிறது. 

* புடலங்காய் நரம்பியல் மற்றும் மனஅமைதியை ஏற்படுத்தும் குணங்கள் கொண்டது. இந்தக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவதால், படபடப்பு, பயம், பதற்றம், மனஅழுத்தம் என்று அனைத்தும் நீங்கும். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of pudalangai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->