குழந்தைக்கு வயிற்றுப்போக்கா? இதுதான் முதல் மருந்து.! மருத்துவர் சொல்லும் ஆலோசனை.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஓராண்டில் 1.30 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழந்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜி.எஸ்.வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

உலகம் முழுவதும் ஓராண்டில் 5 வயதுக்குட்பட்ட 1.3 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழந்து வருகின்றனர். 

இதில் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது‌.

வயிற்றுப்போக்கின் முதல் நிலையில் லேசான சோர்வு மற்றும் அயர்ச்சி இருக்கும். இதற்கு அரிசி கஞ்சி, காய்கறி சூப், இளநீர், மோர் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். 

இரண்டாவது நிலையில் குழந்தைகளுக்கு நா வறட்சி மற்றும் தண்ணீர் தாகம் அதிகம் இருக்கும். இதற்கு, உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். 

மூன்றாம் நிலை மிகவும் சோர்வாக இருக்கும், தண்ணீர் குடிக்க முடியாது. அழுதால் கண்களில் தண்ணீர் வராது. இதற்கு நரம்பு வழியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும். 

வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பூசி போட வேண்டும். சத்தான உணவுகளை அளிக்க வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்" என்று குழந்தைகள் நல மருத்துவர் ஜி.எஸ்.வைரமுத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child have diarrhea This is the first medicine Doctors advice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->