கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் – முக்கியமான விழிப்புணர்வு தகவல்! - Seithipunal
Seithipunal


கர்ப்ப காலத்தில் ஏற்படும் முக்கியமான சவால்களில் ஒன்று தான் கர்ப்ப கால சர்க்கரை நோய் (Gestational Diabetes). இது பெரும்பாலும் தற்காலிகமாகவே இருந்தாலும், சிறப்பு கவனமும், உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடும் இல்லையென்றால், தாயும் குழந்தையும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மேலும், இந்த நோய் ஏற்பட்ட பெண்களுக்கு, எதிர்காலத்தில் Type 2 Diabetes வரக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது என்பதையும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான உணவுகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1. அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள பாக்கெட் உணவுகள்

ஐஸ்கிரீம், கேக், பீட்சா, டோனட், மைதா உணவுகள் போன்றவை ரத்தக் குளுக்கோஸ் அளவை உடனடியாக உயர்த்தி விடும். இவை குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

2. பேரிச்சம் பழம், உலர் திராட்சை

இவை இரும்புச்சத்து அதிகம் கொண்டாலும், கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) அதிகம் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும். எனவே, இதற்குப் பதிலாக பாதாம், பிஸ்தா, மற்ற நலந்தரும் நட்ஸ் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.

3. டிரான்ஸ் கொழுப்புகள் உள்ள உணவுகள்

மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை ரத்தத்தில் மோசமான கொழுப்புகளை அதிகரித்து, உடல்நிலை இன்னும் மோசமாகும் அபாயம் உள்ளது.

4. பழச்சாறு மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்கள்

பழச்சாறுகள் மற்றும் கேனில் கிடைக்கும் ஜூஸ், கார்பனேட்டுப் பானங்கள் போன்றவை பூஜ்ஜியம் ஊட்டச்சத்து மதிப்புடன் கூடியவை. அவை உடனடியாக ரத்த சர்க்கரையை உயர்த்தக்கூடியவை. அதற்குப் பதிலாக, ஒரே ஒரு பழத்தை சாப்பிடுவது சிறந்தது. இவ்வாறு பழத்தை முழுமையாக சாப்பிடுவதன் மூலம் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும்.

5. சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட டீ/காபி

இந்த பானங்களிலும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதற்கு பதிலாக, இயற்கை எலுமிச்சை ஜூஸ், வெள்ளரி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், சர்க்கரை இல்லாத டீ/காபி ஆகியவற்றை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகள் தினமும் சிறிதளவு உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருப்பது, மற்றும் சரியான சிகிச்சை மூலம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க உண்ணும் உணவில் கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Foods to avoid for women suffering from gestational diabetes Important awareness information


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->