குடல் புண்ணை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ குறிப்புகள்.! - Seithipunal
Seithipunal


குடல் புண்ணை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மஞ்சள் ஒரு ஆக்சிஜினேற்ற காரணியாக உள்ளது. இது குடல் பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை தடுத்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது. 

உணவுகளில் அல்லது உணவு பொருட்களை மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் குடல் புண்கள் சரியாகும். மேலும் வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடிக்கலாம். தேநீர் அதிக ஆக்சிஜனேற்ற நன்மைகளை கொண்டுள்ளது. இது குடல் புண்களை எதிர்த்து போராட பயனுள்ளதாக உள்ளது. 

தேநீரில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் குடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து குடற் சுவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும். இயற்கை மருத்துவத்தில் இஞ்சி முக்கிய மூலிகையாக உள்ளது. அஜீரணம் வாயு போன்ற இரைப்பை நோய்களுக்கும் இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது. 

இது குடல் புண்ணை குறைக்க உதவும். இஞ்சியை உணவு மற்றும் உணவுகளில் ஒரு மூலப் பொருட்களாக பயன்படுத்தலாம். நெல்லிக்காய் அல்லது ஆம்லா ஒரு உணவு பொருட்களாக உட்கொள்ளப்படுகிறது. இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளில் மருத்துவ பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. 

இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் குடல் புண்களை ஆற்ற உதவும். மேலும் இரைப்பை புண்களையும் குணப்படுத்தும். கற்றாழை உடல் நிலைகளுக்கு முக்கிய மூலிகை மருந்தாக பயன்படுகிறது. கற்றாழையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் காயங்களை குணப்படுத்தும். 

இது வயிற்று புண்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கற்றாழையை வெறும் வயிற்றில் விழுங்கி வந்தால் குடல் புண்கள் வயிற்று புண்கள் குணமடையும். கற்றாழை ஜெல்லை தண்ணீரில் சேர்த்து பருகினால் வயிற்றில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவும். 

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை பொருள்களில் ஒன்றாக தேன் உள்ளது. இரைப்பை அலர்ஜி வயிற்றுப் புண் குடல் புண்களை போக்குவதில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் நேரடியாக ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stomach problems home remedies in tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->