ஐபிஎல் 2025: புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம், கடைசி இடத்தில் யாரும் எதிர்பார்க்காத அணி!
IPL 2025 point Table after csk vs dc
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சுய வெற்றிப் பயணத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற டெல்லி அணி 6 புள்ளிகளுடன் சிறப்பாக முன்னேறியுள்ளது.
அண்மையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு, மூன்றாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

மறுபுறம், சிஎஸ்கே அணிக்கு இது தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வி. இதனால் 8-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது.
பஞ்சாப் அணி 2-வது இடத்திலும், லக்னோ சூப்பர்ஜயிண்ட்ஸ் அணியோ கடந்த வெள்ளிக்கிழமை மும்பையை 12 ரன்களில் வீழ்த்தி 6-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
தற்போது பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் தொடர்ந்து வருகிறது.
English Summary
IPL 2025 point Table after csk vs dc