ரூ.23,00,00,000 கோடி சிக்கியது! லோக் ஆயுக்தா அதிரடி சோதனை! வசமா சிக்கிய 8 அரசு அதிகாரி! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீஸார் மேற்கொண்ட சோதனையில் 8 அரசு அதிகாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.22.86 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், லோக் ஆயுக்தா போலீஸார் பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி உள்ளிட்ட பல நகரங்களில் 37 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனைக்கு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விவரங்களில், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பொறியாளர் பிரகாஷ் வீட்டில் ரூ.4.26 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டது. பெலகாவி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தாலேஷ்வரின் வீட்டில் ரூ.2.12 கோடியும், மற்ற அதிகாரி விட்டல் ஷிவப்பாவின் வீடில் ரூ.1.1 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டன.

மொத்தம், 8 அதிகாரிகளிடமிருந்து ரூ.22.86 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 Crores seized from 8 government officials in Lok Ayukta raid in Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->