தந்தை கண்முன்னே 3 சகோதரிகள் உயிரிழப்பு! சோகத்தில் குடும்பத்தினர்!
3 sisters death drowned pond
கேரள மாநிலம், மன்னார்காடு பீம நாடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத் இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (வயது26), ரமீஷா (வயது 23), ரின்ஷி (வயது 18) என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
நிஷிதா மற்றும் ரமீஷா இருவரும் திருமணம் ஆன நிலையில் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். பெற்றோரின் வீட்டிற்கு ஓணம் பண்டிகைக்காக அவர்கள் இருவரும் வந்திருந்தனர்.
சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு அவரது தாய் அஸமா சிறுநீரக தானம் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் வீட்டில் ஓய்வெடுத்து இருந்தனர்.
இதனால் மூன்று சகோதரிகளும் தந்தையுடன் பீம நாடு பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றபோது ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தத்தளித்துள்ளார்.
இதனைப் பார்த்து மற்ற சகோதரிகள் அவரை காப்பாற்ற முயற்சி செய்து 3 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அவரது தந்தை கத்தி கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து குளத்திற்குள் மூழ்கிய மூன்று சகோதரிகளையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
ஆனால் மூன்று பேரும் மருத்துவமனைக்கு செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 3 சகோதரிகளும் தந்தை கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 sisters death drowned pond