இறுதிக்கட்ட தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், 7-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதாவது, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், இமாசலபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், சண்டிகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என்று பல்வேறு நிர்வாகிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்தபோதும், அதன் வேகம், கோடை வெயிலைபோல் அதிகரித்துக்கொண்டே சென்றது. 

அதன் படி நேற்று பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பாலாசோர், மயூர்பஞ்ச் நாடாளுமன்ற தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக் உடல் நலம் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இப்படி அனல் பறந்து கொண்டு இருக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து 7-வது கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th round election campaighn finish today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->