சவப்பெட்டி ஊர்வலம் - மணிப்பூரில் கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிப்பு..! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் இரு இன மக்களிடையே கடந்த ஆண்டு முதல் வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த குகி பழங்குடியின மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இயலவில்லை. சமீபத்தில் 3 பெண்கள், 3 குழந்தைகளை கடத்தி சென்று அவர்களை சுட்டுக்கொன்று உடல்களை வீசினார்கள்.

இதனால் பல இடங்களில் வன்முறைகள் வெடித்த நிலையில், நேற்று இரவும் கலவரம் நீடித்தது. இன்று காலை பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குகி பழங்குடியின மக்கள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். 

அதாவது, கடந்த 11-ந் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் பழங்குடியின மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தகனம் செய்ய அவர்கள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். 

இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அதன் படி இன்று மணிப்பூரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து திரண்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

தற்போது வரை அங்கு 218 சி.ஏ.பி.எப். பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஏ.டி.சிங் உள் ளிட்ட மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

இருப்பினும், மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்த மேலும் 50 படைப் பிரிவுகளைக் கொண்ட 5,000 துணை ராணுவப் படையினரை விரைவில் அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

additional troops in manipur for savapetti oorvalam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->