பெரும் எதிர்பார்ப்பு.. பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்... நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஆட்சி அமைத்த நிலையில் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

வருமான வரி உச்சவரம்பு உயர்வு, ஜிஎஸ்டி சலுகைகள், மத்திய அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் அடங்கிய முழு பட்ஜெடாக இருக்கும் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

எனினும் எதிர்க்கட்சிகள் பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்தது, அதானி குழுமம் செய்த முறைகேடு தொடர்பாக ஹெண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மீது விவாதிக்க வேண்டும் போன்ற பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தமிழக எம்பிக்கள் நீட் தேர்வு விலக்கு, சேது சமுத்திரத் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, அரசியல் சாசனத்தின் மீது மத்திய அரசின் அராஜகப் போக்கு போன்றவற்றை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Govt last full budget presented in parliament today.


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->