உ.பி || கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் - உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்.! - Seithipunal
Seithipunal


உ.பியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள, ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 122 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஹத்ரஸ் நகரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையை அறிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file supreme court against uttar pradesh hadhras died issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->