ஓட்டல் சாம்பாரில் மிதந்த பல்லி - 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை சிலர், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒருவரின் இலையில் ஊற்றப்பட்ட சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனே சம்பவம் குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால், அதே ஓட்டலில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மூன்று பேருக்கு லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள் 3 பேரையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் மூன்று பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

இதற்கிடையே விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், ஓட்டலுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தியதோடு ஓட்டலில் சமையல் செய்யும் இடம் மற்றும் ஓட்டலின் பின்புற பகுதியை சுகாதாரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். 

மேலும், உணவு சமைக்கும்போது பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்யும்படியும், தவறும்பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lizard found hotel sambar in vilupuram


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->