தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இனி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு - மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Central Govt Allow Job Exam In Tal And 13 language
மத்திய அரசின் பணிகளில் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், 13 மாநில மொழிகளில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொழி தடையால் யாருடைய உரிமையும் பறிபோகக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வுகள் இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசன் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பெரிய அளவில் பலன் பெற உள்ளார்கள்.
மத்திய அரசு குறிப்பிட்டுள்ள பணிகளுக்கான தேர்வுகள் இனி 13 மாநில மொழிகளிலும் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central Govt Allow Job Exam In Tal And 13 language