சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காலநிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சந்திரயான் விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடைசியாக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது. இது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. ஆனால் அதில் இருந்த விக்ரம் லேண்டர் கருவி திட்டமிட்டபடி தரையிரங்காமல் போனது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லேண்டர் கருவி வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி சேதமடைந்தது. இருப்பினும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் மட்டும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலநிறுத்தப்பட்டது. இது நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சந்திரயான் -2 பணிகள் நிறைவுற்ற போதே சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. பின்னர் சந்திரயான்-3 திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று மக்களவையில் மத்திய அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrayan3 will be launched in August


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->