டெல்லி | டிஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
Delhi DRDO office fire accident
டெல்லி, பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
வடக்கு டெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக வடக்கு டெல்லியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Delhi DRDO office fire accident