முதல் முறையாக விண்ணில் செல்ல இருக்கும் தனியார் ராக்கெட்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2020-ம் ஆண்டு முதல், இந்திய விண்வெளித்துறையை தனியார் நிறுவனத்திற்கு அனுமதித்தது. அந்தவகையில், இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், இந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. 

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்று பெயரிட்டுள்ளது. 

இந்த ராக்கெட்டை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், தயாரித்துள்ளது. வணிக நோக்கத்தின் அடிப்படையில், இந்த ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன் 'விக்ரம்-எஸ்' ராக்கெட்டில் வாடிக்கையாளர்களின் மூன்று சுமைகளும் ஏற்றி அனுப்பப்படுகின்றன. 

தற்போது உள்ள வானிலையை பொறுத்து, இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first private company rocket fly in sky


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->