தேனீக்கள் தாக்கியதால் கடலில் குதித்த மீனவர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் நடிபட்னாவில் மீனவர் வாசுதேவ் சலியன்(65) என்பவர் மீன் பிடிப்பதற்காக நேற்று கடலுக்கு அருகே நின்று வலைவீசி கொண்டிருந்தார். அப்போது வாசுதேவ் சலியனை தேனீக்கள் தாக்கியுள்ளது.

இதனால் தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் கடல் நோக்கி ஓடுவதற்குள், தேனீக்கள் அவரது உடல் முழுவதும் கொட்டியுள்ளன. இதையடுத்து வாசுதேவ் தேனீக்களிடமிருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.

இந்நிலையில் கடலில் குதித்த வாசுதேவை அலைகள் இழுத்துசெல்லப்பட்டத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து படுபித்ரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுபோன்று தேனீக்களின் தாக்குதலுக்கு ஆளான பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fisherman drowns in sea after bee attack in Karnataka


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->