ஆம் ஆத்மி பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் -  பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்.! - Seithipunal
Seithipunal


கெஜ்ரிவால் வீட்டிற்குச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தபோது, போலீசார் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. 

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம் சாட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை நேற்று கைது செய்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five days police custody to bibav kumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->