திரைப்பட பலாத்கார காட்சிகள் ஆபாச இணையத்தில் லீக்.. கண்டுகொள்ளாத கேரள திரையுலகம்.. கண்ணீரில் இளம் நடிகை.!
For Sale Movie Actress Sona Abraham Harassment scene porn website issue
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியை சார்ந்த நடிகை ஷோனா ஆபிரகாம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மலையாள திரைப்படத்தில் பலாத்கார காட்சியில் நடித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த நடிகை தற்கொலை முடிவு எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள தகவலாவது, " எனது 14 வயதில் " பார் சேல் " என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதில் காதல் சந்தியா மற்றும் ஐஸ்வர்யா போன்ற பல நடிகைகள் நடித்திருந்தனர். கதைப்படி காதல் சந்தியாவிற்கு தங்கையை நான் நடித்திருந்தேன். சந்தியாவின் தங்கையாகிய என்னை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அக்கா மனவேதனை அடைந்து தற்கொலை செய்வது போல கதை இருக்கும்.
![](https://img.seithipunal.com/media/for%20sale.jpg)
கதையின் படி வில்லன் என்னை பாலியல் பலாத்காரம் செய்வார். இதனால் இயக்குனர் சமூகத்திற்கு என்ன கருத்து சொல்ல வந்தார் என்பது எனக்கு தெரியாது. படத்தில் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் மட்டுமே இருந்தது. அறியாத வயதில் நான் நடித்த திரைப்படம் அது. 150 பேருக்கு முன்னிலையில் பலாத்கார காட்சியில் நடிக்க இயலாது என்று கூறியதால், இயக்குனரின் அலுவலகத்திலேயே இக்காட்சி படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்ததும் நான் பள்ளிக்கு சென்றுவிட்டேன். இந்நிலையில், நான் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் போது, பாலியல் பலாத்கார காட்சிகள் ஆபாச இணையத்தில் வெளியானது. இதனால் எனக்கும் - எனது குடும்பத்தினருக்கும் பல அவமானங்கள். பலரும் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர். பலர் போன் செய்தும் திட்டினார்கள். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளகினோம்.
நான் இது குறித்து கேரள முதல்வர், கேரள டி.ஜி.பி, சைபர் கிரைம் அதிகாரிகள் என்று பலரிடம் புகார் வழங்கியும் பலன் இல்லை. இப்போதுவரை இக்காட்சிகள் நீக்கப்படவில்லை. பலமுறை தற்கொலை செய்ய முயற்சித்தும் பலனில்லை. கதைப்படி எனது அக்கா இறந்தார். இன்று உண்மையில் நான் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளேன் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
For Sale Movie Actress Sona Abraham Harassment scene porn website issue